தென்பாண்டி நாட்டில் தாமிரபரணி நதியின் வடகரையில் ஸ்ரீவைகுண்டம் என்று வழங்கும் திருப்பதி ஒன்றுண்டு. அதன் வடபகுத ஸ்ரீகைலாசபுரம் எனப்பெறும். அங்கே வழிவழித் தமிழ்ப் புலமையும். முருகப் பெருமானிடத்தில் பக்தியும் பொருந்திய சைவ வேளாளர் குடும்பத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவரது வாழ்கைத் துணைவி சிவகாமசுந்தரிமையர் எனப்பெற்றார். இவர்களுக்கு ஓர் ஆண் மகவு அணித்திங்கள், வெள்ளிக்கிழமை திருவாதிரை நன்னாளில் (24-06-1625) பிறந்தது. அக்குழந்தைக்கு குமரகுருஓபரன் என்று பெயர் சூட்டினர்.